விதைக்கும் பணி


விதைக்கும் பணி
x

அக்கரைப்பேட்டை ஊராட்சியில் பனை விதைகளை விதைக்கும் பணி நடந்தது.

நாகப்பட்டினம்

நாகையை அடுத்த அக்கரைப்பேட்டை ஊராட்சியில் கடற்கரையோரங்களில் பனை விதைகளை விதைக்கும் பணி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அக்கரைப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அழியாநிதி மனோகரன் தலைமை தாங்கினார். இதில் நாகை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பனை விதைகளை விதைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் மனோகரன், நாகை ஊராட்சி ஒன்றிய ஆணையர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்தனர். தொடர்ந்து பனை விதை பாதுகாப்பு உறுதிமொழியை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் எடுத்துக்கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுகந்தி நன்றி கூறினார்.


Next Story