வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமையும் இடத்தை சபாநாயகர் அப்பாவு ஆய்வு


வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமையும் இடத்தை சபாநாயகர் அப்பாவு ஆய்வு
x

பணகுடியில் வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமையும் இடத்தை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

பணகுடி:

ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பணகுடியில் குத்திரபாஞ்சான் அருவிக்கு செல்லும் மெயின் ரோட்டில் 50 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், காவல்கிணறு வடக்கன்குளம் ரோட்டில் மினி விளையாட்டு மைதானம், விஜயாபதி தாமஸ் மண்டபம் அருகே சர்வதேச அளவில் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. அந்த இடங்களை சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட பிரதிநிதி சமூகை முரளி, பணகுடி நகர பஞ்சாயத்து தலைவர் தனலட்சுமி தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story