விழுப்புரத்தில் நடந்த முகாமில்மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு திறன் பேசி கலெக்டர் பழனி வழங்கினார்


விழுப்புரத்தில் நடந்த முகாமில்மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு திறன் பேசி கலெக்டர் பழனி வழங்கினார்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நடந்த முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு திறன் பேசி கருவிகளை கலெக்டர் பழனி வழங்கினார்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட செவித்திறன், வாய்பேசாத, பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து நவீன செயலிகளுடன் கூடிய திறன் பேசிகள் வழங்குவதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். இம்முகாமில் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு கண்டறியும் மருத்துவர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் 5 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா ரூ.13,549 வீதம் ரூ.67,745 மதிப்பில் நவீன செயலிகளுடன் கூடிய திறன் பேசி கருவிகளை கலெக்டர் பழனி வழங்கினார்.

இம்முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் விஜயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story