அஞ்சலகங்களில் ஆதார் திருத்த சிறப்பு முகாம்


அஞ்சலகங்களில் ஆதார் திருத்த சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 20 Jan 2023 11:49 PM IST (Updated: 21 Jan 2023 12:57 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஹூசைன் அகமது விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள ஆதார் சேவை மையங்கள் மூலமாக இந்த நிதியாண்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அவர்களின் கிராமங்களில் இந்த சேவையை எளிதாக பெறுவதற்காக காரைக்குடி அஞ்சல் கோட்டத்தின் சார்பில் பல்வேறு ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

இதில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பிறந்த தேதி திருத்தம், செல்போன் எண் திருத்தம், பயோ மெட்ரிக் மாற்றங்கள் என பல்வேறு சேவைகளை பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள ஆதார் சேவை மையம் மற்றும் சிறப்பு முகாமிற்கு நேரடியாக சென்று சரி செய்து கொள்ளலாம். அதன்படி இந்த ஆதார் சிறப்பு முகாம்கள் காரைக்குடி தலைமை அஞ்சலகம், தேவகோட்டை தலைமை அஞ்சலகம் மற்றும் கோட்டையூர், மானகிரி, பள்ளத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை, உலகம்பட்டி, புதுவயல், கீழச்செவல்பட்டி ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story