மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்


மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்
x

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 5 மணிக்கு மரகத லிங்கத்திற்கு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் மரகத லிங்கத்திற்கு பால், பன்னீர், தேன், சந்தன உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் திருவையாறு எனும் இசை நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story