ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மீது தனிகவனம் செலுத்த வேண்டும்

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மீது தனிகவனம் செலுத்த வேண்டும்
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மீது தனிகவனம் செலுத்த வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மீது தனிகவனம் செலுத்த வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.

ஆய்வு

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் அங்கன்வாடி மையம் மற்றும் குருவாடி ரேஷன் கடையில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருப்புகலூர் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளிடம் தினமும் உணவு வழங்கப்படுகிறதா? என்ன உணவு வழங்கப்படுகிறது? என கேட்டறிந்தார். மேலும் குழந்தைகளின் எடை அளவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்துமாறு அங்கன்வாடி ஊழியரிடம் அறிவுறுத்தினார்.

பொருட்களின் இருப்பு...

பின்னர் குருவாடி ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், பொருட்களின் இருப்பு குறித்து ரேஷன் கடை பணியாளரிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story