அகஸ்தியர்பட்டியில் இருந்து சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
அகஸ்தியர்பட்டியில் இருந்து சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து குடில் அமைத்து தங்கி உள்ளனர். இவர்கள் வருகிற 30-ந்தேதி வரை கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்வார்கள்.
இதற்கிடையே நேற்று முதல் முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு தனியார் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் அகஸ்தியர்பட்டியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் சமையல் பாத்திரம், அடுப்பு, உணவுப்பொருட்கள், ஆடுகள் ஆகியவற்றையும் பஸ்களில் ஏற்றி சென்றனர். சுமார் 120 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தனியார் வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் அரசு பஸ்களில் அனுப்பி வைத்தனர். இந்த பணிகளை சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப் பார்வையிட்டார். மேலும் பாதுகாப்பு பணிகளையும் கவனித்தார்.