ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
தர்மபுரி மாவட்டத்தில், 57 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் 57 ஊராட்சிகளில் நாளை நடக்கிறது. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிராம ஊராட்சிகள்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் 10 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி தர்மபுரி வட்டாரத்தில் இலக்கியம்பட்டி, திப்பிரெட்டிஅள்ளி, கொண்டகரஅள்ளி, முக்கல்நாயக்கனஅள்ளி, கொண்டம்பட்டி, செட்டிகரை, நாயக்கனஅள்ளி, நூலஅள்ளி, சோகத்தூர், நல்லம்பள்ளி வட்டாரத்தில் அதியமான்கோட்டை, ஏலகிரி, பாளையம்புதூர், மானிதஅள்ளி, ஏ. ஜெட்டிஅள்ளி, தடங்கம், தொப்பூர், காரிமங்கலம் வட்டாரத்தில் ஜிட்டாண்ட அள்ளி, அடிலம், பைசுஅள்ளி, பண்டார அள்ளி, திண்டல், பெரியாம்பட்டி, பிக்கனஅள்ளி, இண்டமங்கலம், ஜக்கசமுத்திரம் ஆகிய கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.
இதேபோல் பாலக்கோடு வட்டாரத்தில் பெல்லாரஅள்ளி, ஜர்தலாவ், கும்மனூர், பஞ்சப்பள்ளி, ஏ.மல்லாபுரம், கம்மாளப்பட்டி, எர்ரனஅள்ளி, பென்னாகரம் வட்டாரத்தில் வட்டுவனஅள்ளி, பருவதனஅள்ளி, பிளியனூர், சின்னம்பள்ளி, மஞ்சநாயக்கனஅள்ளி, ஏரியூர் வட்டாரத்தில் நாகமரை, தொன்ன குட்டஅள்ளி, பந்தாரஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.
பட்டா மாறுதல்
அரூர் வட்டாரத்தில் மோப்பிரிபட்டி, வேட கட்டமடுவு, கொங்கவேம்பு, அக்ரஹாரம், செல்லம்பட்டி, மொரப்பூர் வட்டாரத்தில் கெலவள்ளி, இருமத்தூர், கொங்கராப்பட்டி, தாசரஅள்ளி, வகுரப்பம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் சித்தேரி, பொம்மிடி, கடத்தூர் வட்டாரத்தில் தென்கரைக்கோட்டை, கேத்து ரெட்டிபட்டி, ஒப்பிலிநாயக்கனஅள்ளி, பசுவபுரம் ஆகிய கிராம ஊராட்சிகளிலும் என 10 வட்டாரங்களில் மொத்தம் 57 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
மேற்கண்ட கிராம ஊராட்சிகளில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொள்ளும் சிறப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இந்த முகாமில் பட்டா மாறுதல், சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் வழங்குதல், வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் விண்ணப்பம் பெறுதல், விவசாய கடன் அட்டை வழங்குதல், கால்நடைகள் பராமரித்தல், சிறு, குறு விவசாயிகள் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தில் தங்கள் விவசாய நிலங்களில் பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஆணை பெற விண்ணப்பம் பெறுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.