வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு முகாம்


வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு முகாம்
x

குடும்ப அட்டைகளை திருத்தம் செய்வதற்கு வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்ற கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

குடும்ப அட்டைகளை திருத்தம் செய்வதற்கு வட்ட வழங்கல் அலுவலகங்களில் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்ற கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோரியும் கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை மனுவாக அளிக்கலாம்.

பயன்பெறலாம்

இதன்படி தங்கள் புகார்களை தெரிவிக்கும் பொருட்டு அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அதிகாரிகளிடம் மனு கொடுத்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story