மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க 103 மையங்களில் சிறப்பு முகாம்


மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க 103 மையங்களில் சிறப்பு முகாம்
x

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க 103 மையங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது என்று மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க 103 மையங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது என்று மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார்.

ஆதார் இணைப்பு

நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் உள்ள வீடுகள், கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாயத்திற்கான மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நெல்லை மின் பகிர்மான வட்ட மத்திய அலுவலகத்தில் நேற்று தொடங்கப்பட்டது.

நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ் மணி, நெல்லை நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் வீரலட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைமை பொறியாளர் செல்வக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாம் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதில் உதவி செயற்பொறியாளர்கள் எட்வர்ட் பொன்னுசாமி, தங்கமுருகன், சின்னசாமி, ராஜகோபால், சங்கர, சண்முகராஜன், சலோமி வாசுகி, சசிரேகா, உதவி மின் பொறியாளர்கள் வெங்கடேஷ், சங்கரநாராயணன், சரவணன் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு முகாம்

இந்த சிறப்பு முகாம் நேற்று முதல் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை நடைபெறும்.

மேலும் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள 103 பிரிவு அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமினை பயன்படுத்தி மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்து கொள்ளலாம்.

இத்தகவலை நெல்லை மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார்.


Next Story