மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம்


மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 18 July 2023 1:00 AM IST (Updated: 18 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

நாகப்பட்டினம்

மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகளிர் உரிமை திட்டம்

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ளலாம். நாகை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற ஏதுவாக சிறப்பு முகாம்கள் வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகின்றன.

நாகை கலெக்டர் அலுவலகம் மற்றும் நாகை, கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

விண்ணப்பம்- ஆவணங்கள்

இந்த முகாம்களுக்கு பூர்த்தி செய்த அசல் விண்ணப்பம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மின்சார வாரிய கட்டண ரசீது உள்ளிட்டவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும். இது தொடர்பாக மேலும் விவரங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்த கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. அதற்கான தொலைபேசி எண்கள் விவரம் பின்வருமாறு:-

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம்- 04365 251992, நாகை தாலுகா அலுவலகம்- 04365242456, கீழ்வேளுர் தாலுகா அலுவலகம்- 04366274493, திருக்குவளை தாலுகா அலுவலகம்- 04366 245450, வேதாரண்யம் தாலுகா அலுவலகம் 04369 250456. தாலுகா அலுவலக கட்டுப்பாட்டு அறைகளை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story