ஆதார் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகரசபை தலைவர் சுந்தரலட்சுமி ஆலோசனைப்படி 1-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தனலட்சுமி ஏற்பாட்டில் ஆதார் கார்டு சேர்த்தல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெயர் திருத்தம், அலைபேசி எண் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய ஆதார் கார்டு பெறுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் பெரிய புளியம்பட்டி, சின்ன புளியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Related Tags :
Next Story