ரேஷன்அட்டையில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்


ரேஷன்அட்டையில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
x

ரேஷன்அட்டையில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் 10-ந் தேதி நடக்கிறது

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களில் 10-ந் தேதி (சனிக்கிழமை) சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கும் மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் பொது வினியோக திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருந்தால் முகாமில் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.

அதன்படி வேலூர் தாலுகாவில் கம்மசமுத்திரம், அணைக்கட்டு தாலுகாவில் சத்தியமங்கலம், காட்பாடி தாலுகாவில் வண்டறந்தாங்கல், குடியாத்தம் தாலுகாவில் கருணீகசமுத்திரம், கே.வி.குப்பம் தாலுகாவில் அங்கராங்குப்பம், பேரணாம்பட்டு தாலுகாவில் அரவட்லா ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

எனவே பொதுமக்கள் சிறப்பு குறைதீர்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். சிறப்பு முகாமில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் அரசு வகுத்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story