பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாம்
பள்ளிகொண்டாவில் பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
வேலூர்
அணைக்கட்டு தாலுகாவில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாலுகாவில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. பள்ளிகொண்டா வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது. மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனை, பட்டா மாறுதல், வருவாய் ஆவணங்களில் பிழைதிருத்தம் உள்பட 17 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி தெரிவித்தார்.
Related Tags :
Next Story