அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் மருத்துவ மதிப்பீட்டு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட அலுவலர் செந்தமிழ்செல்வி, வட்டார வளமைய சிறப்பு ஆசிரியர் பிரேம் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு அடையாள அட்டையினை பெற்றுச்சென்றனர். முடிவில் சிறப்பு ஆசிரியர் காளைமேகம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story