மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை மாற்றுத்திறனாளிகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் 350 விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைகள் 295 பேருக்கு வழங்கப்பட்டது. உபகரணங்கள் பெறுவதற்கு 10 பேரும், 102 பேர் புதிய விண்ணப்பமும் முகாமில் அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சாமிநாதன் தலைமையிலான எலும்பு முறிவு, மனநலம், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் முட நீக்க வல்லுனர் ராமன், செயல் திறன் உதவியாளர் பிச்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.