மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
x

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

அரியலூர்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் சாமிநாதன் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் ராஜா, மனநல மருத்துவர் அன்பழகி, காது, மூக்கு, தொண்டை நிபுணர் இளமதி, கண் மருத்துவர் பிரவீன், காது பரிசோதகர் ரத்னா, கண் பரிசோதகர் கலைமணி உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். முகாமில் செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வேல்மணி, இடையர்பள்ளி ஆசிரியர் சந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் தேசிய அடையாள அட்டை 90 பேருக்கும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை 264 பேருக்கும், வழங்கப்பட்டது. கல்வி உதவித் தொகை கேட்டு 2 பேரும், பராமரிப்பு உதவித்தொகை கேட்டு 3 பேரும், உதவி உபகரணம் கேட்டு 5 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.


Next Story