மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்; இன்று நடக்கிறது


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்; இன்று நடக்கிறது
x

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்; இன்று நடக்கிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டி.ஐ.டி. கார்டு) வழங்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தின் தொலை தூரத்தில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 6-ம் கட்டமாக மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்றும் (வியாழக்கிழமை), அசாவீரன்குடிக்காடு, குறிச்சிக்குளம் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் நாளை (வெள்ளிக்கிழமை), உடையார்பாளையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைெபறவுள்ளது. இம்முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இம்முகாமில் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். அந்த சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5, இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story