அனைத்து துறைகளுடன் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்


அனைத்து துறைகளுடன் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்
x

அனைத்து துறைகளுடன் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவிலில் அனைத்து துறைகளுடன் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வட்டார வேளாண் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களில் ஒன்றான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட கிராமங்களான வேலப்பநாயக்கன்வலசு மற்றும் புதுப்பை ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் நேற்று விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுசாமி தலைமை தாங்கினார்.

முகாமில் வேளாண் உழவர் நலத்துறையுடன் இணைந்து தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, விதை சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சித் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு அந்தந்த துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தங்கள் துறையின் பங்கு குறித்தும், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறினார்கள்.

இடுபொருட்கள்

முகாமில் விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களுக்கும் பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ஊட்டச்சத்து நிர்வாகம் குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது, விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் மற்றும் பங்கேற்பு துறைகளின் மூலம் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

விவசாயிகள் தங்கள் செல்போன் மூலமாகவே வேளாண்மை மற்றும் பிற துறை திட்டங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுவதற்கு வசதியாக உழவன் செயலி பற்றி விளக்கமாக கூறப்பட்டது. பட்டா மாறுதல், பயிர் கடன், கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களும் முகாமில் பெறப்பட்டன.



Next Story