மத்தியஅரசின் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்


மத்தியஅரசின் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்
x

மத்தியஅரசின் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய தரவு தளத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தஞ்சை ஜெபமாலைபுரத்தில் மத்திய அரசின் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு பதிவு முகாம் நடைபெற்றது. இதில் 100 நாள் வேலை செய்பவர்கள் மற்றும் கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அடையாள அட்டை பெறுவதற்கான பதிவினை செய்தனர். இதில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தனபாலன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, மத்திய, மாநில அரசின் தேசிய தரவுதளத்தில் அடையாள அட்டை பதிவு செய்து அதன் பயன்பாட்டின் முக்கியதுவத்தை தெளிவு படுத்தினார். மேலும் இவர், தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் அடையாள அட்டைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரதாப், ஜேம்ஸ் மற்றும் சமூக ஆர்வலர் பேர்நீதி ஆழ்வார் மற்றும் தொழிலாளர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story