651 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்


651 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
x

வேலூர் மாவட்டத்தில் 651 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடந்தது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 9-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் 651 வாக்குச்சாவடி மையங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் பார்வையிட்டு பெயர், சேர்க்க, நீக்க, திருத்த, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பம் அளிக்கலாம் என்றும் விண்ணப்ப படிவங்களில் வாக்காளர்கள் சமீபத்திய கலர் புகைப்படங்களை ஒட்டி, ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி இந்த முகாம் மாவட்டம் முழுவதும் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் சென்று பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பித்தனர்.

நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story