வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்


வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
x

வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பெயர் சேர்த்தல், முகவரி திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியல்

தஞ்சை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பட்டியல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வாக்காளர்பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்து அவ்வாறு பிழை இருந்தால் அதனை சரி செய்வதற்கான சிறப்பு முகாம்கள் தஞ்சை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.

சிறப்பு முகாம்கள்

காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில் 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்கக்கோரி விண்ணப்பம் அளித்தனர். மேலும் பெயர் நீக்கம், முகவரி திருத்தம், பெயர் திருத்தம், ஆதார் எண் இணைப்பு தொடர்பாகவும் சிறப்புமுகாம்களில் விண்ணப்பித்தனர்.


Related Tags :
Next Story