தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம்
வாணியம்பாடி பகுதியில் தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.
திருப்பத்தூர்
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- அம்பூர்பேட்டை பகுதியில் தொழுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது.
முகாமை ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி தொடர் சிகிச்சை ெபற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது ஆலங்காயம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குரு.சரவணகுமார், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story