தபால் நிலையங்களில் புதிய ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்


தபால் நிலையங்களில் புதிய ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 23 July 2023 12:43 AM IST (Updated: 23 July 2023 5:36 PM IST)
t-max-icont-min-icon

தபால் நிலையங்களில் புதிய ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

திருச்சி

புதிய ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்புதிய ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பழனிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், பெரம்பலூர் மற்றும் துறையூர் ஆகிய மூன்று தலைமை தபால் நிலையங்கள். முசிறி பகுதியில் உள்ள முசிறி, காட்டுப்புத்தூர் துணை தபால் நிலையங்கள். துறையூர் பகுதியில் உள்ள கண்ணனூர், எரகுடி துணை தபால் நிலையங்கள். பெரம்பலூர் பகுதியில் உள்ள வேப்பந்தட்டை, லப்பைக்குடிக்காடு, குன்னம் துணை தபால் நிலையங்கள். ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள பிச்சாண்டார் கோவில் துணை தபால் நிலையம் ஆகிய இடங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

இந்த சிறப்பு முகாமில் புதிய ஆதார் பதிவு இலவசமாகவும், பழைய ஆதாரில் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50-ம், கைரேகை, கண் விழித்திரை மறுபதிவு செய்ய ரூ.100 கட்டணமாக பெறப்படும். இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த சேவையினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story