நிலத்திற்கான இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம்


நிலத்திற்கான இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் பாதை பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம் திண்டிவனத்தில் 3 நாட்கள் நடக்கிறது

விழுப்புரம்

விழுப்புரம்:

திண்டிவனம் முதல் நகரி வரை புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்காக சலவாதி, தாதாபுரம், கருவம்பாக்கம், பெரப்பேரி, கீழ்மாவிலங்கை, ரோஷணை, மேல்பாக்கம், மேல்மாவிலங்கை, புத்தனந்தல், வடபூண்டி, ஊரல், வெள்ளிமேடுபேட்டை ஆகிய 12 கிராமங்களில் தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இறுதி தீர்வம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 63 சதவீத இழப்பீட்டுத்தொகை உரிய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் எஞ்சியுள்ள இழப்பீட்டுத்தொகை பெற வேண்டியுள்ள உரிமைக்கான பதிவு ஆவணங்கள், இறப்பு சான்று, வாரிசு சான்று, வங்கியில் அடமானம் மீட்கப்பட்ட பதிவு ஆவணங்கள் போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்காத நில உரிமையாளர்கள் இழப்பீட்டுத்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. எனவே பட்டாதாரர்கள் பட்டா நகல், வில்லங்கச்சான்று, கிரைய ஆவணம், மூலஆவணம், வாரிசு அடிப்படையில் பெற்ற நிலம் எனில் இறப்பு சான்று, வாரிசு சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி சரியான ஆவணங்களை சமர்ப்பித்து இழப்பீட்டுத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். இறப்பு சான்று, வாரிசு சான்று மற்றும் பட்டா நகல் தேவைப்படுவோர் உரிய அசல் ஆவணங்களுடன் வந்தால் சான்றுகள் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உரிய சான்றிதழ்கள் விரைந்து வழங்கப்படும். உரிய நில உரிமையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.


Next Story