4 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்


4 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 30 Aug 2023 1:00 AM IST (Updated: 30 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாக்காளர் பட்டியல்

திருவாரூர் மாவட்டத்தில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு 2024-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1,178 வாக்கு சாவடிச்மையங்களை சீரமைப்பதற்கு முதல் கட்டமாக வரைவு வாக்குச்சாவடிமையங்களின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

சிறப்பு முகாம்

மேலும் 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச் சாவடி மையங்களை 2 வாக்குச்சாவடி மையங்களாக பிரித்தல், சேதம் அடைந்த வாக்குச்சாவடி மைய கட்டிடங்களுக்கு பதிலாக அருகில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளி கட்டடம் அல்லது அரசு கட்டிடங்களை தேர்வு செய்தல், வாக்குச்சாவடி மையங்களில் உள்ள பழுதுகளை நீக்குதல் உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி (சனிக்கிழமை), 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 18-ந் தேதி (சனிக்கிழமை), 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story