ஸ்ரீவைகுண்டத்தில் தராசு படிகளுக்கு முத்திரை வைக்கும் சிறப்பு முகாம்
ஸ்ரீவைகுண்டத்தில் தராசு படிகளுக்கு முத்திரை வைக்கும் சிறப்பு முகாம் ஆறு நாட்கள் நடக்கிறது.
ஸ்ரீவைகுண்டம்:
தொழிலாளர் துறை திருச்செந்தூர் முத்திரை ஆய்வாளர் ராம்மோகன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சங்கரகோமதி ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி உத்தரவின்படி தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் ஆலோசனையின் பேரில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முத்திரை இடப்படாத தராசு படிகள் வைத்திருக்கும் வணிகர்கள் முத்திரையிட்டு கொள்வதற்காக ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் தராசு படிகளுக்கு முத்திரை வைக்கும் சிறப்பு முகாம் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 12-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து முத்திரையிட்டு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வணிகர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.