மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
கலவையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் கலெக்டர் பங்கேற்றார்.
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடந்தது. வருவாய் கோட்டாட்சி தலைவர் பூங்கொடி தலைமை தாங்கினார். கலவை தாசில்தார் ஷமீம், திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக் முன்னிலை வகித்தனர். பேரிடர் மேலாண்மை இடர்பாடு தாசில்தார் இந்துமதி வரவேற்றார். கலவை தாலுகாவில் உள்ள 50 கிராமங்களில் இருந்து 120 மாற்றுத்திறனாளிக்கு அழைப்பு விடுவிக்கப்பட்தில் 65 நபர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கு பரிந்துரை செய்தார். பின்னர் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறினார். கலவை பஜார் வீதியில் மளிகைக் கடையில் பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி அபராதம் விதித்தார்.
உதவி கலால் ஆணையர் சத்தியபிரதாப், மாவட்டக் குழு உறுப்பினர் சிவகுமார், மண்டல துணை தாசில்தார்கள் இளையராஜா, சத்யா, வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம நிர்வாக அதிகாரிகள் ஸ்ரீதர், சுகுமார், ராணி, கீதா வினோத் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர். - KALAVAI