விவசாயிகளின் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்ற சிறப்பு முகாம்


விவசாயிகளின் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்ற சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் தாலுகாவில் விவசாயிகளின் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றுவதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் வட்டாரத்தில் விவசாயிகள், இனி வருங்காலங்களில் தங்களது பல்வேறு துறை சார்ந்த தேவைகளை ஒரே இடத்தில் பெற வசதியாக தங்களது நில விவரங்களை வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களிடம் வேளாண் அடுக்குத்திட்டத்தில் பதிவேற்றம் செய்து பயன் பெற வருகிற 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் அடுக்கு என்ற செயலில் பதிவேற்றம் செய்யும் விவசாயிகள், வேளாண் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண்பொறியியல் துறை, ஊரக வளர்ச்சிதுறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, விதை சான்றளிப்பு துறை, சர்க்கரை துறை போன்ற 13 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக விவசாயிகளின் அடிப்படை புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணியில் வருவாய் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள்.

எனவே சங்கரன்கோவில் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி தங்களது ஆதார் எண், புகைப்படம், நில உரிமை விவரம் ஆகியவற்றை வேளாண் அடுக்கு என்று செயலியில் பதிவேற்றம் செய்வதன் மூலம் இனி வருங்காலங்களில் விவசாயிகள் தங்களது அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பெற்று பயனடையலாம். இதற்காக சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் வருகிற 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை இந்த சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் ஐ.ராமர் தெரிவித்துள்ளார்.


Next Story