மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாம்
குடியாத்தத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வேலூர்
குடியாத்தம் காந்திநகர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை நேற்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்திருந்த பயனாளிகளிடம் மனுக்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், கிராம நிர்வாக அலுவலர் உஷா, ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பள்ளி மாணவர்களிடம் பாடங்கள் சம்பந்தமாக கேள்விகளை கேட்டார். அதற்கு மாணவர்கள் பதில் அளித்தனர்.
Related Tags :
Next Story