ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு முகாம் 64 ஆயிரத்து 405 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு முகாம்  64 ஆயிரத்து 405 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

கொரோனா தடுப்பூசி

ஈரோடு

தமிழகத்தில் கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிக்கூடங்கள் உள்பட மொத்தம் 1,597 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.

இந்த முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. அதன்படி 2 ஆயிரத்து 213 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 34 ஆயிரத்து 566 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும், 27 ஆயிரத்து 626 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் என மொத்தம் 64 ஆயிரத்து 405 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story