காரியாபட்டி பேரூராட்சியில் சிறப்பு முகாம்
காரியாபட்டி பேரூராட்சியில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
விருதுநகர்
காரியாபட்டி,
கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்ப படிவங்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம் காரியாபட்டி பேரூராட்சியில் பேரூராட்சி திருமண மண்டபம், அரசு தொடக்கப்பள்ளி, அமலா உயர்நிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளி செவல்பட்டி சமுதாயக்கூடம் கரிசல்குளம், நெடுங்குளம் ஆகிய மையங்களில் நடைபெற்றது. காரியாபட்டியில் மொத்தம் 5,917 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அந்தந்த வார்டு பகுதி குடும்ப அட்டைதாரர்கள் சிறப்பு முகாம்களில் தங்களது விண்ணப்ப படிவங்களை பதிவு செய்தனர் காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்.கே.செந்தில், செயல் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கவுன்சிலர்கள் சரஸ்வதி பாண்டியராஜன், சங்கரேஸ்வரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story