சேலம் மாவட்டத்தில் சிறப்பு முகாம்: 95 ஆயிரத்து 401 பேருக்கு கொரோனா தடுப்பூசி-கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் 95 ஆயிரத்து 401 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. அதன்படி சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 31-வது சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்காக 5 ஆயிரத்து 240 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 19 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்படி நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் மாநகராட்சி பகுதியில் 14 ஆயிரத்து 424 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 95 ஆயிரத்து 401 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த தகவலை கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story