மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க பள்ளிகளில் சிறப்பு முகாம்


மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க பள்ளிகளில் சிறப்பு முகாம்
x

மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க பள்ளிகளில் சிறப்பு முகாம் நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் ஆதிதிராவிடர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2022 -2023-ம் ஆண்டு முதல் பிரிமெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களின் பெயரில் வங்கி கணக்கு இருத்தல் வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் வங்கி கணக்கு செயல்பாட்டில் இருந்து, ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021 22-ஆம் கல்வியாண்டில் கல்வி உதவித் தொகை பெற்ற மாணவர்களில் பெரும்பாலானவர்களின் வங்கி கணக்குடன், ஆதார் எண் இணைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தங்களுடைய வங்கி கணக்குடன், ஆதார் எண்ணை இணைக்கவும், வங்கி கணக்கு தொடங்கவும் அந்தந்த பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி கல்வி உதவித்தொகை பெற்று பயன் பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story