சங்கரன்கோவில் அருகே சிறப்பு முகாம்


சங்கரன்கோவில் அருகே சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:17:13+05:30)

சங்கரன்கோவில் அருகே நடந்த சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள பட்டாடைகட்டி, ஈச்சந்தர கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர்கள் சுமதி கனகவேல், கருப்பசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சங்கரன்கோவில் தாசில்தார் பாபு முன்னிலை வகித்தார். உதவி கலெக்டர் சுப்புலட்சுமி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். முகாமில் வருவாய் ஆய்வாளர் வசந்தா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story