வேளாண்மை துறை சார்பில் சிறப்பு முகாம்


வேளாண்மை துறை சார்பில் சிறப்பு முகாம்
x

வேளாண்மை துறை சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.

கரூர்

வெள்ளியணை,

தாந்தோணி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் வெள்ளியணை ஊராட்சி பகுதி விவசாயிகளுக்காக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வெள்ளியணை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் கிசான் கிரடிட் அட்டை, மத்திய அரசின் விவசாயிகளுக்கான உதவித்தொகை, சிறு குறு விவசாயி சான்றிதழ், பட்டா, சிட்டா பெயர் மாற்றுதல், வேளாண்மை கருவிகளான மண் வெட்டி, கடப்பாரை, கை தெளிப்பான், நிலத்தில் மண் வரப்பு அமைத்தல், வண்டல் மண் எடுத்தல் போன்ற கோரிக்கை மனுக்களை துறை அலுவலர்களிடம் வழங்கலாம். இந்த தகவல் வேளாண்மை துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story