வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
x

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் மேற்கொள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தங்களை மேற்கொள்ளவும் அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலுப்பூர் தாலுகாவுக்குட்பட்ட அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு முகாம்களை இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பொன்னமராவதி தாலுகா காரையூர் பகுதிக்குட்பட்ட மேலதானியம், ஒலியமங்கலம், இடையாத்தூர், சடையம்பட்டி, நல்லூர், அரசமலை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களின் பெயர்களை சேர்த்தல், வாக்காளர் பட்டியல் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்தல், இறந்தவர்கள் பெயர் நீக்கம், ஒரே தொகுதியில் குடியிருப்பு மாறியவர்கள் முகவரி மாற்றம் போன்ற மனுக்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் பூர்த்தி செய்து கொடுத்தனர். இந்த முகாமில் இளம் வாக்காளர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் ஆர்வமுடன் சேர்த்தனர். மேலும் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ், தேர்தல் தனித்துணை தாசில்தார் இஸ்மாயில் மற்றும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.


Next Story