குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிய சிறப்பு முகாம்
குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிய சிறப்பு முகாம்
நாகப்பட்டினம்:
குழந்தைகளுக்கான 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் கீழ், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு முகாம் நாகை அருகே சிராங்குடி புலியூர் தொடக்க பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வமணி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் முத்தழகன், திட்ட உதவியாளர் கார்த்திக், மேற்பார்வையாளர் மேரிபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்காடி பணியாளர்கள் பரிமளா வரவேற்றார்.தேசிய குழந்தைகள் மற்றும் சிறார் நல திட்ட மருத்துவர் கார்த்திக் மருத்துவ பரிசோதனை செய்தார்.இதில் குழந்தைகளின் எடை, உயரம் உள்ளிட்டவை கணக்கிடப்பட்டன. முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளின் விவரங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளுக்கு பிறகு ஊட்டச்சத்து மட்டும் தேவைப்படும் குழந்தைகளுக்கு தனியாக சிறப்பு ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டன. முகாமில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் புரவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.