ஏலகிரி மலையில் சாதி சான்றிதழ் பெற சிறப்பு முகாம்
ஏலகிரி மலையில் சாதி சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை வருகிற 21-ந்் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதன் காரணமாக ஏலகிரி மலைவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள சாதி சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் நடத்தி மனுக்கள் பெறப்பட்டன. இதில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு மனு அளித்தனர்.
முகாமில் திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி, ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணைத் தலைவர் திருமால், வருவாய் ஆய்வாளர் ரவிமாராஜன், கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் வீட்டு மனை பட்டா கொடுத்தால் மட்டுமே சாதி சான்றிதழ் வழங்க முடியும் என அதிகாரிகள் கூறிவருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கூறியும் சில அதிகாரிகள் தங்களிடம் வீட்டுமனை பட்டா கேட்டு வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.