பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளை கண்டறிய சிறப்பு முகாம்


பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளை கண்டறிய சிறப்பு முகாம்
x

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளை கண்டறிய சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

விருதுநகர்


பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளை கண்டறிய சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

சிறப்பு முகாம்

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளை கண்டறியும் சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்க்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவராக இருக்க வேண்டும்.

18 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். குழந்தை திருமணம் செய்யாதவராக இருத்தல் வேண்டும். இரண்டு பெண் குழந்தைகளில் ஏதேனும் ஒரு பெண் குழந்தை திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெறுபவராக இருக்கக்கூடாது. பயனாளியின் வங்கி கணக்கு தற்பொழுது பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

வைப்புத்தொகை

மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பயனாளிகள் முகாமில் கலந்து கொள்ளும்போது முதல்-அமைச்சரின், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வைப்புத்தொகை ரசீது, வங்கி கணக்கு புத்தகநகல், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல், தாய் மற்றும் பயனாளியின் புகைப்படம், ரூ.1 ரெவின்யூ ஸ்டாம்ப் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரின் செல்போன் எண் 91500 58568-ஐ தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story