மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்
பொறையாறு, செம்பனார்கோவில் பகுதியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடந்தது
பொறையாறு:
பொறையாறு, திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான் மற்றும் பூம்புகார் பிரிவு அலுவலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. செம்பனார்கோவில் உதவி செயற்பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் மேற்பார்வையில் செம்பனார்கோவில் அருகே பரசலூர் ஊராட்சி மன்ற அலுவலகம், பொறையாறு புதிய பஸ் நிலையம், சமுதாயக்கூடம், திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகம், ஆக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம், நடுக்கரை ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேற்கண்ட இடங்களில் இன்றும் (புதன்கிழமை) முகாம் நடக்கிறது. இதனை மின் நுகர்வோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாமில் பொறையாறு மின் உதவி பொறியாளர் அன்புச்செல்வன், செம்பனார்கோவில் உதவி பொறியாளர் அருள்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், ஊராட்சி செயலாளர் நாகராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மின்அலுவலர்கள் கலந்துகொண்டனர்.