மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
மாம்பாக்கம் பகுதியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்தது.
ஆற்காடு கோட்டம் மாம்பாக்கம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண் பதிவேற்றும் சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து அந்தந்த கிராமங்களில் தண்டோரா போட்டு தெரிவிக்கப்பட உள்ளது. ஆதார் எண் இணைக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.
மாம்பாக்கம் பகுதியில் 6-ந் தேதி ஊராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 9-ந் தேதி குப்பிடிசாத்தம், பாரிமங்கலம், ஆகிய பஞ்சாயத்துகளிலும், 10-ந் தேதி பொன்னம்பலம், கன்னிகாபுரம், பிள்ளையார் கோவில் பகுதியிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. 11-ந் தேதி இருங்கூர், சிவபுரம், மருதம், ஆகிய கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திலும், 12-ந் தேதி தட்டச்சேரி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
5-ந் தேதி சொரையூர் பஞ்சாயத்திலும். 7-ந் தேதி மேலபழந்தை பஞ்சாயத்திலும், 9-ந் தேதி வாழப்பந்தல் பஞ்சாயத்திலும், 10-ந் தேதி ஆயர்பாடி நடுநிலைப்பள்ளியிலும் நடக்கிறது. 12 மற்றும் 13-ந் தேதி மேல் புதுபாக்கம் பஞ்சாயத்திலும், 5-ந் தேதி வேம்பி, பாலி, தோனிமேடு, பஞ்சாயத்து அலுவலகத்திலும், 7-ந் தேதி கோடாலி, சிட்டந்தாங்கல், செங்கனாவரம், அத்தியானம் பஞ்சாயத்து அலுவலகத்திலும் 9-ந் தேதி ஆயிரம் மங்கலம் சீம்பாடி மட்டதாரி பெருமாந்தாங்கல் பஞ்சாயத்து அலுவலகத்திலும் 10-ந் தேதி பென்னகர் பஞ்சாயத்து ஆகிய அலுவலகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.
மேற்கண்ட தகவல் ஆற்காடு செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.