மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் 6-ந் தேதி முதல் நடக்கிறது.
பெரம்பலூர்
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மங்களமேட்டை அடுத்த லெப்பைக்குடிகாடு உட்கோட்டத்திற்கு சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வருகிற 6-ந் தேதி திருமாந்துறை, முருகன்குடி, பசும்பலூர், 7-ந் தேதி லெப்பைக்குடிகாடு, பெருமத்தூர், வாண்டகப்பாடி, 11-ந் தேதி அத்தியூர், தேவையூர், பிம்பலூர் ஆகிய ஊர்களில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுடைய ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து பயன்பெறுமாறு உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story