மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
மங்கலம்பேட்டையில்மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்தது.
கடலூர்
மங்கலம்பேட்டை,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனூர் துணை மின் நிலையத்தில் மின் நுகர்வோர்களின் வீடு, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தல் மற்றும் பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. விருத்தாசலம் மின் செயற்பொறியாளர் சுகன்யா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் உதவி செயற்பொறியாளர்கள் பாரதி, மின்வாரிய அலுவலர்கள் சுரேஷ்குமார், ஜம்புலிங்கம், ஜமுனாராணி, ஏழுமலை, சுந்தரவடிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மின்நுகர்வோர்கள் அளித்த விண்ணப்பங்களை பரிசீலித்து பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story