வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்


வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்
x

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் 682 இடங்களில் நேற்று நடந்தது. இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் 682 இடங்களில் நேற்று நடந்தது. இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவம் 6 பி- ல் வாக்காளர்களின் ஆதார் எண்ணை பெற்று இணைக்கும் பணியை மேற்கொண்டனர்.

இந்த பணியை தீவிரப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் நேற்று 682 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. மையங்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களிடம் ஆதார் எண் மற்றும் படிவத்தை பெற்று இணைத்தனர்.

இன்றும் நடக்கிறது

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது. பொதுமக்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடி மையத்துக்கு ஆதார் எண்ணுடன் சென்று இணைத்துக் கொள்ளலாம். மேலும் வாக்காளர்கள் தாங்களாகவே தங்களது ஆதார் எண்ணை இணைக்க Elector facing Portal/Apps like NVSP, VHA ஆகியவற்றில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story