வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்


வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
x

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.

வேலூர்

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,300 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஆதார் விவரங்கள் உரிய படிவத்தின் வாயிலாக பெறப்பட்டு வருகிறது.

தற்போது பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு ஆதார் எண் விவரத்தினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story