வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்
x

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் 2-வது கட்டமாக நேற்று நடந்தது. கிராமப்புறங்களில் முகாம் நடைபெறும் இடத்திற்கு வாக்காளர்கள் ஆர்வமாக வந்து படிவம் 6 பி-யில் தங்கள் ஆதார் எண்ணினை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கொடுத்து வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொண்டனர். ஆனால் நகர்ப்புறங்களில் முகாம் குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாததால் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வாக்காளர்களிடம் ஆர்வமில்லை. இதனால் நகர்ப்புறத்தில் சில வாக்குச்சாவடிகளில் நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்காக வழிமேல் விழி வைத்து காத்து கொண்டிருந்ததை காணமுடிந்தது. சிலர் இணையவழியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து கொண்டனர். இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 18 மற்றும் 25-ந்தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story