ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம்


ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம்
x

விருதுநகர் மின்கோட்டத்தில் ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

விருதுநகர்


விருதுநகர் மின்கோட்டத்தில் ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

சிறப்பு முகாம்

விருதுநகர் மின் கோட்டத்தில் பொதுமக்கள் அவரவர் வசிக்கும் பகுதிகளிலேயே ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (திங்கட்கிழமை) கீழ்க்கண்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மின்வாரிய மேற்பார்வை என்ஜினீயர் தேன்மொழி கூறினார். சிறப்பு முகாம்கள் ஆமத்தூர் பிரிவில் ஆமத்தூர் ஜி.என்.பட்டி, மேலாமத்தூர், வெள்ளூர், புதுக்கோட்டை, செவலூர், சித்தமநாயக்கன்பட்டி, மூளிப்பட்டி, மருதநத்தம், தவசிலிங்காபுரம், காருசேரி, மத்திய சேனை முத்தலாபுரம், பெத்துரெட்டிபட்டி, வி. முத்துலிங்காபுரம், துலுக்கப்பட்டி பிரிவில் மேலச்சின்னையாபுரம் ஆகிய பகுதிகளில் முகாம் நடக்கிறது.

கன்னி சேரி புதூர், வேப்பிலைப்பட்டி, சங்கரலிங்காபுரம், .ஓ.கோவில்பட்டி, வாடியூர், மேலக்கோட்டையூர், ஆவுடையாபுரம், பட்டம் புதூர், ஒண்டிப்புலி நாயக்கனூர், வச்சக்காரப்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, பொம்மையாபுரம், குப்பாம்பட்டி, இ.குமார்லிங்காபுரம், வலையபட்டி, கட்டணார்பட்டி, இ. முத்துலிங்காபுரம் பகுதிகளில் நடைபெறுகிறது.

விருதுநகர்

அதேபோல விருதுநகர் ஊரகப்பிரிவில் சத்திர ரெட்டியபட்டி, உசிலம்பட்டி, அய்யனார் நகர், வடமலைக்குறிச்சி, பாவாலி, செங்குன்றாபுரம், நடையனேரி, வீர செல்லையாபுரம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

சூலக்கரை பிரிவில் சூலக்கரை, வ.உ.சி. நகர், தாதம்பட்டி ரோடு, பவித்ரா நகர், மாடர்ன் நகர், அழகாபுரி இனாம் ரெட்டியபட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.


Related Tags :
Next Story