ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம்


ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம்
x

ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

விருதுநகர்

ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

சிறப்பு முகாம்

அருப்புக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

சிறப்பு முகாம் நடைபெறும் பகுதிகள் விவரம் வருமாறு:- காரியாபட்டி வடக்கு, காரியாபட்டி பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட காரியாபட்டி நகர் பகுதியை ேசர்ந்த பகிர்மானங்கள் மற்றும் எஸ்.நாங்கூர், பூம்பிடாகை, விடத்தகுளம், முஷ்டக்குறிச்சி, டி.கடம்பன்குளம், சிறுவனூர், பிள்ளையார்குளம், கம்பிக்குடி, பாப்பனம், வி.நாங்கூர், மேல கல்லங்குளம், திம்மாபுரம், எஸ்.கல்லுப்பட்டி, டீ வேப்பங்குளம், மீனாட்சிபுரம்.

அருப்புக்கோட்டை

தெற்கு காரியாபட்டி பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மாந்தோப்பு, சித்து மூன்றடைப்பு, கே.செவல்பட்டி, சூறையூர், மறைக்குளம், இருவர் குளம், குறவைகுளம், கழுவனசேரி, ஜோகில்பட்டி, சத்திரம், புளியங்குளம், கல்குறிச்சி, வக்கனாங்குண்டு, தோணுகால், குறண்டி, ஆவியூர், அரசகுளம் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும்.

பாலையம்பட்டி பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட பாலையம்பட்டி வடக்கு, தெற்கு, கிழக்கு, எர்ரம்பட்டி, பி. எம். புதுப்பட்டி, பண்ணை மூன்றடைப்பு, மணவராயனேந்தல், பொய்யான்குளம், குறிஞ்சாக்குளம், நெசவாளர் காலனி, வேல்முருகன் காலனி, திருக்குமரன் நகர், போஸ்டல் காலனி, கோபாலபுரம், கோவிலாங்குளம், தெற்கு மற்றும் வடக்கு கட்டங்குடி, அருப்புக்கோட்டை ஊரக பிரிவுக்குட்பட்ட கடம்பன்குளம், மலைப்பட்டி, எண்டப்புலி, மெட்டுக்குண்டு, பாலவனத்தம், சின்னவள்ளிகுளம், நாகம்பட்டி.

திருச்சுழி

திருச்சுழி பிரிவுக்குட்பட்ட ஆனைக்குளம், முத்துராமலிங்கபுரம், கடம்பன்குளம், கிருஷ்ணாபுரம், சேதுபுரம், அம்மன்பட்டி, சொக்கம்பட்டி, காத்தம்பட்டி, உடையனம்பட்டி, நெல்லிக்குளம், தம்பநாயக்கன்பட்டி, விழுப்பனூர், தமிழ்பாடி, வேப்பிலைச்சேரி, மறையூர், மிதிலை குளம், சேனேந்தல், வேலாயுதபுரம் மற்றும் கோரை குளம்.

எனவே மேற்குறிப்பிட்ட இடங்களில் ஆதார் எண்ணை இணைக்க மாபெரும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் தேன்மொழி கூறினார்.


Related Tags :
Next Story