ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் சிறப்பு முகாம்


ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் சிறப்பு முகாம்
x

கமுதி, திருவாடானையில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது

ராமநாதபுரம்

கமுதி

கமுதி, திருவாடானையில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

சிறப்பு முகாம்

கமுதி தாலுகா கிழக்கு உள்வட்டம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆதார் அடையாள அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் பணி தொடர்பான சிறப்பு முகாம் கமுதி வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா தலைமையில் நடைபெற்றது. அதில் துணை வட்டாட்சியர்(தேர்தல்) சத்தியபாமா, முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், கமுதி கிழக்கு உள்வட்ட வருவாய் ஆய்வாளர் மணிவல்லபன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கிராம உதவியாளர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைத்தனர்.

இணைப்பு

திருவாடானை தாலுகாவில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. கற்காத்தக்குடி மற்றும் புலியூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை தாசில்தார் செந்தில்வேல் முருகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் மெய்யப்பன், சிதம்பரம், கிராம நிர்வாக அலுவலர் சேக்ரட் நாத், ராமலிங்கம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சாமித்துரை, கீதா, பாகம்பிரியாள், கண்ணகி, இளநிலை உதவியாளர் ராதிகா, ஊராட்சி தலைவர் ஜோசப் சங்கீதா ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story